அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி.. சங்கீதா பகிர்ந்த சூப்பர் வீடியோ..

3 weeks ago 17

Last Updated:December 26, 2024 2:42 PM IST

கடந்த ஆண்டு, சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலான ஆனந்த ராகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.

News18

ரெடின் கிங்ஸ்லி திரையில் தோன்றினாலே அனைவருக்கும் சிரிப்பு தானாக வந்துவிடும். அவர் திரையில் உடல் மொழியிலேயே மற்றவர்களை சிரிக்க வைத்துவிடுவார். அதுதான் அவரின் தனித்துவமும் கூட. அப்படி டாக்டர், பீஸ்ட், ஜெயிலர், கோலமாவு கோகிலா என அவர் நடித்த அனைத்து படங்களிலும் தன் இயல்பான நடிப்பாலும், பேச்சாலும் மனம் கவர்ந்த காமெடியனாக இருக்கிறார்.

அவர் கடந்த ஆண்டு, சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலான ஆனந்த ராகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் சிம்பிளாக கோவிலில் நடந்தது. அதன் பிறகு வைத்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


சங்கீதா திருமணத்திற்கு பின் தான் நடித்து வந்த சீரியல் தொடர்களிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் சங்கீதா மற்றும் ரெடின் தம்பதி கர்ப்பகாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளனர். அதில் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட திருமண வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதற்கு கேப்ஷனாக ” ஆமாம்.. நீங்கள் கேட்டது உண்மைதான். நாங்கள் மிக விரைவில் எங்களுடைய குழந்தையை வரவேற்கப் போகிறோம்” என்று கூறியுள்ளனர்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவித்து வருகின்றனர்.

First Published :

December 26, 2024 2:42 PM IST

Read Entire Article