அன்று ‘என்னை அறிந்தால்’ இன்று ‘விடாமுயற்சி’ - இத கவனிச்சீங்களா?

2 weeks ago 9

Last Updated:January 01, 2025 10:42 AM IST

Ajith | 2014-ல் ரஜினியின் ‘கோச்சடையான்’ மற்றும் ‘லிங்கா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் ஒன்று அவரது மகள் சௌந்தர்யா இயக்கிய படம். அதே போல 2024-ல் ரஜினியின் ‘லால் சலாம்’ மற்றும் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் வெளியாகின.

News18

ஆங்கிலத்தில் ‘History repeat’ என்று சொல்வது போல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதே நிகழ்வுகள் மீண்டும் அப்படியே நடப்பது போன்ற ஒப்புமைகள் என்றும் ஆச்சரியமளிப்பவை. அப்படியான ஒரு எதிர்பாராத ஒற்றுமை 10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர்கள் அஜித், விஜய், இயக்குநர் ஷங்கர் படங்களால் நிகழ இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. அதேபோல 10 ஆண்டுகள் கழித்து தற்போது 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த 2015-ல் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 படங்கள் 2025-ல் வெளியாக உள்ளன. இதில் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. அதே போல, ‘விடாமுயற்சி’ பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதேபோல 10 ஆண்டுகள் கழித்து விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படியான ஒற்றுமைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்தால் 2014- 2024 ஆண்டுகளுக்கும் ஒப்புமைகள் இருப்பதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2014-ல் ரஜினியின் ‘கோச்சடையான்’ மற்றும் ‘லிங்கா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் ஒன்று அவரது மகள் சௌந்தர்யா இயக்கிய படம். அதே போல 2024-ல் ரஜினியின் ‘லால் சலாம்’ மற்றும் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் வெளியாகின.

2014-ல் விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் வெளியானது. இரண்டு வேடங்களில் விஜய் நடித்த அந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ஜீவா எனத் தொடங்கும். அதேபோல 2024-ல் வெளியான ‘தி கோட்’ படத்திலும் விஜய் 2 வேடங்களில் நடித்தார். ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ஜீவா எனத் தொடங்குவது கவனிக்கத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ 2014-ல் வெளியாக, அதனை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் கிரிஷ் இயக்கியிருந்தார். அதேபோல 2024-ல் வெளியான ‘அமரன்’ படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார்.

தனுஷுக்கு 2014-ல் அவரது 25வது படமாக ‘வேலையில்லா பட்டதாரி’ வெளியானது. 2024-ல் 50-வது படமாக ‘ராயன்’ வெளியானது. சூர்யாவுக்கு 2014-ல் ‘அஞ்சான்’, தற்போது ‘கங்குவா’ இரண்டும் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ வெளியானது. 2024-ல் ‘அரண்மனை 4’ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

First Published :

January 01, 2025 10:42 AM IST

Read Entire Article