அதிரடியாக பணி நீக்கம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்.. 2025-ஆம் ஆண்டில் இப்படியா நடக்கணும்?

2 weeks ago 15

Published: Friday, January 10, 2025, 21:55 [IST]

அமெரிக்காவில் தொழில்நுட்பம், ஊடகம், நிதி, உற்பத்தி சில்லரை விற்பனை என பல்வேறு துறைகளில் 2 ஆண்டுகளாக பணி நீக்கம் தொடர்கிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டிலும் பணி நீக்கங்கள் தொடரவுள்ளன. பிசினஸ் இன்சைடரில் வெளியான ஒரு அறிக்கையில் பல்வேறு நிறுவனங்கள் பல காரணங்களுக்காக பணி நீக்கங்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக இந்த பணி நீக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வதற்கான காரணங்கள் மாறுபட்டாலும் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் செலவு குறைப்பு ஆகியவையே முதன்மை காரணங்களாக உள்ளன. உலக அளவில் சுமார் 41% நிறுவனங்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சி காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் பணியாளர்களை குறைக்கவுள்ளதாக அறிக்கை தெரிவித்திருக்கிறது.

 அதிரடியாக பணி நீக்கம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள்.. 2025-ஆம் ஆண்டில் இப்படியா நடக்கணும்?

2025 ஆம் ஆண்டில் எந்தெந்த நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்துள்ளன?: டிராப்பாக்ஸ், கூகிள் மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கம் குறித்து அறிவித்துள்ளன. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்களும் 2025 ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்ய உள்ளன.

மைக்கிரோசாஃப்ட்: 2025-ஆம் ஆண்டில், சத்யா நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் செக்யூரிட்டி டிவிஷனில்பணிபுரியும் குறைந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிநீக்கங்கள் பல மாதங்களாக ஊழியர்களின் செயல் திறனை மதிப்பிட்ட பிறகு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

பிளாக் ராக் நிறுவனம்: அறிக்கையின் படி பிளாக் ராக் நிறுவனம் தனது 21,000 பணியாளர்களில் 200 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3,750 ஊழியர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர் மற்றும் 2025 ஆம் ஆண்டில் மேலும் 2,000 பேர் சேர்க்கப்பட உள்ளனர்.

பிரிட்ஜ்வாட்டர்: பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனம் திங்களன்று தனது ஊழியர்களில் 7 சதவீதத்தை குறைத்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்: வாஷிங்டன் போஸ்ட் செவ்வாயன்று அதன் பணியாளர்களில் சுமார் 4 சதவீதத்தை பணிநீக்கம் செய்வதாகக் தெரிவித்தது. ஏனெனில் இந்த பிரபல செய்தித்தாள் நிறுவனம் அதிகரித்து அருமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான்: அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி, 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு இறுதிக்குள் 14,000 மேலாளர் பதவிகளை நிறுவனம் குறைக்கும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை அமேசானுக்கு ஆண்டுதோறும் $3 பில்லியன் வரை சேமிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Major US Companies Announce Layoffs: Microsoft, BlackRock, and More

Discover the full list of major US companies, including Microsoft, The Washington Post, and BlackRock, implementing layoffs as they navigate economic challenges in the new year.

Read Entire Article