Last Updated:December 16, 2024 9:56 PM IST
Acidity problem | அன்றாட வாழ்க்கை முறை காரணமாக பலர் அசிடிட்டி பிரச்சனையை அடிக்கடி அனுபவிக்கிறார்கள். மன அழுத்தம், மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சீரற்ற தூக்கம் போன்றவை இந்த அசிடிட்டியை மோசமாக்கும்.
நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படும் அசிடிட்டி என்பது பெரும்பாலான நபர்கள் காலை நேரத்தில் அனுபவிக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. இது தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகிறது. செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் மீண்டும் உணவுக் குழாய்க்குள் திரும்பி பாயும்போது இது ஏற்படுகிறது.
அன்றாட வாழ்க்கை முறை காரணமாக பலர் அசிடிட்டி பிரச்சனையை அடிக்கடி அனுபவிக்கிறார்கள். மன அழுத்தம், மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சீரற்ற தூக்கம் போன்றவை இந்த அசிடிட்டியை மோசமாக்கும். எனினும், காலை நேரத்தில் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு பல இயற்கையான வழிகள் உள்ளன.
அசிடிட்டி பிரச்சனையின் அறிகுறிகள் என்னென்ன?
- நெஞ்செரிச்சல்
- சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாமல் மீண்டும் வாய்க்கு வருதல்
- வயிற்று வலி
- வாயு மற்றும் வயிற்று உப்புசம்
- உணவை விழுகுவதில் சிக்கல்
- வீசிங் அல்லது இருமல்
அசிடிட்டி பிரச்சனையை சரிசெய்வதற்கான வீட்டு வைத்தியங்கள்:
ஓமம்
ஓமம் விதைகள் வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி பிரச்சனையை சரி செய்வதற்கான அற்புதமான ஒரு இயற்கை தீர்வு. ஓமம் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்தோ அல்லது வெறுமனே வாயில் போட்டு மென்றோ அதன் சாறை விழுங்குவதன் மூலமாக செரிமான சாறுகள் வெளியிடப்பட்டு அமிலத்தால் ஏற்படும் அறிகுறிகள் குறையும். அதுமட்டுமின்றி, ஓமத்தில் வீக்க எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால், இது இரைப்பை குடல் அமைப்பை அமைதிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
மோர்
மோர் பருகுவது அமிலத்தை நடுநிலையாக்கி வயிற்றில் அதன் விளைவை அமைதிப்படுத்தும். மோரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது நமது உடலில் கார சூழலை உண்டாக்குகிறது. எனவே, உணவு சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது நெஞ்செரிச்சல் காரணமாக ஏற்படும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
இதையும் படிக்க: ஊறவைத்த பாசிப்பருப்பை தினமும் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே...!
ஆப்பிள் சைடர் வினிகர்
தண்ணீரோடு ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பருகுவது வயிற்றில் உள்ள pH சமநிலையை உருவாக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். பலர் இது வயிற்று உப்புசம் மற்றும் அஜீரண பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக அமைவதாக கூறுகின்றனர். எனினும், இது தொடர்பான அறிவியல் பூர்வமான நிறுவனங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
வெதுவெதுப்பான தண்ணீர்
வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கு உதவும். இது செரிமானத்தை தூண்டி வயிற்றில் உள்ள அமிலத்தை கரைத்துவிடும். சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உணவு செரிமானமாவதற்கு மிகவும் உதவும். எனினும் குளிர்ந்த நீர் அசிடிட்டி அறிகுறிகளை இன்னும் மோசமாக்கி வயிற்றை பாதிக்கும்.
இதையும் படிக்க: காலை உணவுக்கு சிறந்த ஆப்ஷனான அவகாடோ பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா..?
வாழைப்பழம்
வாழைப்பழம் வயிற்றில் உள்ள அதிக அமிலத்தன்மையை சமநிலையாக்கி, நெஞ்செரிச்சல் தீவிரத்தை குறைக்கும். பழுத்த வாழைப்பழங்களில் காணப்படும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உடலின் pH சமநிலையை உருவாக்குகிறது. அசிடிட்டி பிரச்சனைக்கு உதவக்கூடிய மற்றொரு பழம் பப்பாளி.
கருப்பு சீரக விதைகள்
வீக்க எதிர்ப்பு பண்புகள் காரணமாக கருப்பு சீரக விதைகள் செரிமானப் பாதையை அமைதிப்படுத்தி, நெஞ்செரிச்சலை குறைக்கிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கருப்பு சீரக விதைகளை கொதிக்க வைத்து உணவுக்கு பிறகு சாப்பிடுவதன் மூலமாக பலன் பெறலாம்.
அசிடிட்டி என்பது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் ஏற்படுவது இன்னும் மோசமானதாக அமையும். எனவே விரைவான நிவாரணத்தைப் பெறுவதற்கு இந்த வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம். எனினும், நீண்ட கால நிவாரணத்தைப் பெறுவதற்கு ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வது அவசியம். அசிடிட்டி மோசமாகும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை பெற ஒரு மருத்துவரை அணுகலாம்.
First Published :
December 16, 2024 9:56 PM IST